மதம்
பிற மதத்தை
தவறாகப் புரிந்தவன்
மதவாதியாகிறான்...!
தன் மதத்தை
தவறாகப் புரிந்தவன்
தீவிரவாதியாகிறான்...!
எல்லா மதத்தையும்
சரியாகப் புரிந்தவன்
மனிதனாகிறான்...!
மதம்
மதமாகவே இருந்தால்
மதம் பிடிக்கும்
மதம்
மார்க்கமானால்
வழிபிறக்கும்..!
மதத்திற்கு
நிறம் கொடுத்தவன்
மனிதன்...!
வானவில்லின்
வண்ணங்கள் ஏழு
மூல காரணம் ஒன்று...!
வண்ணங்கள்
வாழ்க்கையைக்
கொண்டாடவே...!
கொன்றாட அல்ல..!
- பா. மாறன்