நட்பு
நல்ல நண்பன் அரிய நட்பின் உறைவிடம்
ஆயின் நல்ல நண்பன் கிடைப்பதரிது ;
பொன்னும் பொருளும் பெருந் தனம் தந்து
வாங்கிட முடியும், ஒரு போதும் வாங்க முடியாது
நல்ல நண்பனின் நட்பு -அது' தீதிலா நல்லோர் திரளை '
நாம் மனம்கொண்டு நாடி சென்றால் தானாக
நம்மைத் தேடி வரும் புதையல், அதுவே நட்பு. .