நட்பு
ஆயிரம் தொல்லை களிலே
ஆயிரத்தி ஒன்றாவது தொல்லையே
ஆயினும் பிரிய மனமில்லையே!
கல கல வென பேசுவாய்
குடு குடு வென ஓடுவாய்
கிடு கிடு வென ஆடுவாய்
சிடு சிடு வென சாடுவாய்
எல்லை இல்லா தொல்லை நீ
எதிலும் பிரிந்தது இல்லை நீ
பசியில் இருந்தால்
உணவளிக்கும் தாயும் நீ
பசிதீரும் முன்னே
முழுங்கிவிடும் பேயும் நீ
நிம்மதி யில்லா திருந்தால்
ஆறுதல் தருவாய்
நிம்மதி யோடி ருந்தால்
அமைதியை கெடுப்பாய்
கண் களிக்கும் மங்கைகளை
என் தங்கைகள் என்பாய்
காண முடியா தவற்றை
என் மணப்பெண் என்பாய்
நண்மையே செய்வேன் என்பாய்
ஒருபோதும் செய்ய மாட்டாய்
உண்மையே பேசுவேன் என்பாய்
ஒருபோதும் பேச மாட்டாய்
கொஞ்சம் புகழ்ந்தாலும் என்ன
காரியம் வேண்டும் என்பாய்
கேவலமாக இகழ்ந்தாலும் பல்லை
காட்டி பக்கம் வருவாய்
இனிய பாடல் வரிகளை உன்
இடி போல் குரலால் கொல்லுவாய்
என் பேச்சை நீ கேட்டதில்லை
உன் பேச்சை நான் கேட்டதில்லை
ஆனாலோ பேச்சுகள் மட்டும்
மணி கணக்கில் நீளும்
காலை வணக்கம்
பிறந்த நாள் வாழ்த்து
அந்த நாள்
இந்த நாள்
இனிய நாள் - ஒருபோதும்
வாழ்த்தியது இல்லை - ஒருபோதும்
எதிர்பார்த்தது மில்லை
கேலி கிண்டல்கள் நாளும் உண்டு
கேண்டின் பண்டங்கள் நாமும் தின்று
இருக்கும் காசு குறைந்த அளவே
கொடுக்கும் திருப்தி நிறைந்த அளவே
அன்பு என்பது வார்த்தைகளில் இல்லை
ஆனால் பஞ்சமது இதயத்தில் இல்லை
காலத்தின் கட்டாயம் பிரியும்
காலத்தால் கட்டாயம் இனையும்
தோழா
உனை பற்றி கவிஎழுத
இலக்கியம் தேவை இல்லை
இதயம் ஒன்று போதுமே!