நரமாமிச தேவதை

உதிரம் குடிக்கும் உந்தன் அதரங்கள்
நரம்பு கிழிக்கும் உன் நகங்கள்
இதயம் உடைக்கும் உன் கண்கள்
மூளை பிதுக்கும் உன் அகங்கள்
எலும்புகள் நொறுக்கும் பற்கள்
சதைகள் பிளக்கும் உன் கரங்கள்
என்னை உண்ட பின்
உன்னிடம் கேட்டேன்
என்னிடம் சுவை எதில் மிக என்று?
உன் புஜங்கள் தான் என்று
இயல்பாய் சொன்னாய்!