தென்படாத தென்றலே
தென்படாத தென்றலே!
உன்னைத் தேடி தேரோட்டும்
என் பூவிதழ்!
வசந்தத்தில்லாவது வாசல்
வருவாயா! - என்
வாசம் தெறிக்க!
வாடகை நிலவில்லேறி வலம்
வருவாயா! வான்னோக்கி
என்னிதழ் விரிக்க!
மஞ்சத்தில் மலர்ந்த மங்கை
வருவாளோ!- என்
சுவாசம் பறிக்க!
என் சுவாசம் நீயென்று உணரா
மங்கைக் கூந்தலில்
நான் மணப்பதா!
மரணிக்கிறேன்!...
தென்றலாக நீயும் வர
பூவாக காத்திருப்பேன்!... உயிருள்ளவரை!....