காகா

காதலுக்கு கண்கள் உண்டு
காமத்துக்கு கண்கள் இல்லை
காதல் இதயங்களில் வாழ்கிறது
காமம் உடல்களில் வீழ்கிறது...

காதல் கல்லறைவரை வரும்
காமம் இருட்டறையோடு முடியும்
காதல் கண்ணியமானது
காமம் சூனியமானது...

காதலில் நிம்மதி
காமத்தில் சறுக்கல்
காதல் வாழவைக்கும்
காமம் சாகடிக்கும்...

காதல் தெய்வீகமானது
காமம் நரகமயமானது
காதல் புண்ணியம்
காமம் பாவம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (9-Oct-17, 9:00 am)
Tanglish : kaakaa
பார்வை : 167

மேலே