மனிதம் என்பதே

மனிதம் என்பதே மகோன்னதம்
எனக்கு
மற்ற பேதங்கள்
என்னைத் தொடா !

வானமும் சிகரமும்
இயற்கை உயரம்
மனித மனமே
எனக்கு உயரம் !

நதியலைகள்
இயற்கையின் குளிர்ச்சி
மனிதமன உணர்வலைகள்
என் இதயத்தின் குளிர்ச்சி !

குற்றால குளிர் அருவி
நீர் வீழ்ச்சி
குளிர்ந்த மனித மனமே
என் இதய அருவி !

இவ்வருவி வீழ்ச்சியா
அன்றி எழுச்சியா ?
தேர்ந்து உரைப்பீர் தோழர்களே !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Oct-17, 8:28 am)
Tanglish : manitham enpathe
பார்வை : 589

மேலே