வலி

காலையில் சீக்கிரமே
எழுந்து பல் துலக்கி குளித்து முடித்து
வாசல் தெளித்து கோலம் போட்டு
பாத்திரங்களை கழுவி அடுக்கி வைத்து விட்டு
எல்லாவற்றையும் சரியாக அடுக்கி வைத்து
வீட்டை பெருக்கி முடித்து
கிளம்பி வயலுக்கு போக
கதவை பூட்டுவதற்காக மிக வேகமாக
கைப்பிடியை பிடித்து இழுத்தேன்.
கீழே என் கால் சிக்கியிருப்பதை கவனிக்கவில்லை.
ஒரு விரல் சென்று இடுக்கில் சிக்கியது
மேலே கதவு நசுக்கியது.
கீழே அரிக்கால் நசுக்கியது.
கண்ணில் இருந்து தாமாக தண்ணீர் கொட்டியது.
எம்மால் இந்த சின்ன காயத்தையே தாங்க இயலவில்லையே...

அந்த சின்ன பிஞ்சு குழந்தை
எவ்வளவு வலிகளை சுமந்திருக்கும்.

அந்த குழந்தைக்கு வலியை கொடுத்த கொடூரன் துடி துடிக்க வேண்டும்..

பெண்ணின் உடம்பு தான் உங்களுக்கு வேண்டுமா...?
அப்படி என்னத்தான் அந்த உடம்பில் கண்டாய்...
நீ பால் குடித்த மார்பகங்களும்
நீ பிறந்த இடமும்
காமமா...

எதை சொல்லியும் திருத்த மாட்டீர்கள்.
போங்கய்யா...

சின்ன பிஞ்சு குழந்தைகளை குழந்தைகளாக பாருங்கள் ஐயா...
உங்கள் பாதங்களில் கூட விடுகிறேன்...
தவறான எண்ணத்தோடு பார்க்காதீர்கள்...

என் மழலை மீது
உன் நஞ்சு கை பட்டால்
வெட்டி விடுவேன்.

நீதிபதிகளே உங்கள் பிள்ளை தான்
அப்பிள்ளையும்...

என் பிள்ளையை நான் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கனவெல்லாம் கண்டிருந்தேன் ...

~ பெண்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (9-Oct-17, 7:13 am)
Tanglish : vali
பார்வை : 383

மேலே