இப்போதுதான் பிறந்திருக்கிறீர்கள்

பெயர்கள் தான்
முகம் தெரியாதவற்றுக்கு
உருவம் தருகின்றன

பெயர்கள்தான்
பலநேரம்
விரும்பவும் வெறுக்கவும்
வைக்கின்றன

ரோஜாவுக்கு நீங்கள்
இன்னொரு பெயர் வைக்கலாம்
முந்தைய மணம்
அதில் இருக்கப்போவதில்லை

தேனுக்கு நீங்கள்
வெறொரு பெயரிடலாம்
அதன் முந்தைய இனிப்பு
அதில் ருசிக்கப்போவதில்லை

ஒரே அர்த்தத்தில்
மொழிகளை மாற்றலாம்
என்றாலும்
தாய்மொழியின் உணர்வுகள்
தகர்ந்துபோவதை
மறுக்கமுடியுமா ?

இடையில் பெயர்களை
மாற்றுவோரெல்லாம்
சற்றே யோசியுங்கள்
முன்பு உங்களை
தெரிந்தவர்களுக்கெல்லாம்
இப்போது நீங்கள்
ஒன்றுமில்லை

இன்று பார்க்கும் அனைவருக்கும்
நீங்கள்
இப்போதுதான்
பிறந்திருக்கிறீர்கள் !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (8-Oct-17, 10:17 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 119

சிறந்த கவிதைகள்

மேலே