ஆண் பெண் ஈர்ப்பு ஒரு யதார்த்தமனான பரிசீலனை

என் வயது இப்போது 77.நான் சிறு வயதில் இருந்தே அன்றாட தினசரி பத்திரிக்கையை படிப்பது
உண்டு . நான் முன்னம் எழுதி இருந்தது போல இந்த ""ஆண் பெண் ஈர்ப்பு"" அந்த ஆணடவன் எல்லா
ஜீவ ராசிகளுக்கும் ஒரு வர பிரசாதம்.இத அந்த ஆண்டவனே மறுக்க முடியாது.இந்து மதத்தில்
இதையே மன்மதன் ரதி காதல், மன்மத லீலை மன்மத பணம் என்று எல்லாம் சொற்றோடர்களை நம்
வாழ்க்கையிலே உபயோகப் படுத்தி வருகிறோம்.
கிருஸ்தவ மதத்தில் அவர்கள் இதையே " ஆதாம் ஏவாள்" அறிமுகம்,ஆதாம் மரத்தில் இருந்த ஒரு
ஆப்பிளை சாப்பிட்ட பிறகு ஏவாளோடு உடல் உறவு வைத்து கொண்டதால் இந்த உலக மக்கள் உற்பத்தி
ஆனார்கள் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.மன்னிக்கவும் எனக்கு இஸ்லாமிய மாதத்தில் என்ன
நம்பிக்கை இருந்து வருகிறது என்று தெரியாது.( என்னை மன்னிக்கவும்).
சமீப காலமாக எல்லா பத்திரிக்கைகளிலும் ஒரு நாள் தவறாம இளம் பெண் கற்பழிப்பு,
திருமணமான பெண்ணிடம் பலாத்காரம்.இரவு எட்டு மணிக்கு மேலே தனியாக வந்த இளம்
பெண்ணை காரில் கடத்தி போய் கற்பழிப்பு, எட்டு வயது ஏழு வயது சிறுமி ( ஒரு தடவை நான்
படித்தபோது ஒரு ஐந்து வயது சிறுமி) இவர்களிடம் உடல் உறவு வைத்து கொண்ட செய்திகள் வந்த
வண்ணம் இருக்கிறது.இந்த 'ட்ரெண்ட்' , இந்த வெறி, இப்போதைய சமூகத்தில் மிக மிக அதிகமாக ஆகி
வருவதை நாம் எல்லோரும் படித்து வருகிறோம்.
அந்த ஆண்டவன் எல்லா ஜீவ ராசிகளிலும் ஆணை தான் பலசாலிகளாகவும் பெண்ணை
மலர் போல மிருவாகவும்,மென்மையாகவும் படைத்து இருக்கிறான்.ஆங்கிலத்தில் பெண்களை பற்றி
குறிப்பிடும் போது அவர்களை WEAKER SEX என்று தானே சொல்லுகிறார்கள்.ஒன்று நிச்சியம் பெண்கள்
அழகிலோ, அறிவிலோ, திறமையிலோ WEAK இல்லவே இல்லை.உடல் கூற்றினால் தான் இந்த
WEAKNESS இருக்கலாம்.
ஒரு ஆண் மகன் தன்னுடைய உடல் பலத்தையும் , பெண்ணிடம் இருக்கும் மூர்க்கத்தனமான,
வெறியினாலும் என்ன செய்கிறோம் யாரை செய்கிறோம் என்று துளிகூட யோஜனை பண்ணாமல்
செய்து வரும் ""கற்பழிப்புகளை"" படிக்கும் போது மனம் வேதனை படுகிறது.சில சமயங்களில்
கண்களில் கண்ணீர் வருகிறது.இதில் இன்னும் கோராமை என்ன என்றால் கற்பழித்த பெண் கொலை
செய்தவனை அடையாளம் காட்டி விடுவாள் என்கிற பயத்தில் கற்பழித்ததும் இல்லாமல் ஆளை உரு
தெரியாமல் கொன்றும் விடுகிறான்.உண்மையான சாட்சி இருந்தாலே இந்த காலத்திலேயே பண
பலத்தினாலும், பதவி பலத்தாலும் நிரூபிக்க முடியாமல் உண்மை பரிதாபமாக இறந்து விடுகிறதே!!!
எனக்கு தெரிஞ்சு இந்த அவலம், கேவலம்,ஒரு இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னாள் இல்லவே
இல்லை.ஒரு திருமணமான ஆண் மகன் தன மணைவி பிரவசத்தின் போதோ, இல்லை விஷ ஜுரம்
வந்தோ இறந்து போனால் தன குழந்தைகளை வீட்டில் கவனித்து வர ஒரு பெண் சம்மதம் பெற்று
மறுமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்து கொண்டு இருந்தான்.ஆண்டவன் கொடுத்த ஈர்ப்பில் அப்படி
மறுமணம் செய்து கொண்ட பெண்ணுக்கும் குழந்தை பெற உதவுகிறான்.ஒரு வேலை அவன் வீட்டில்
அவன் குழந்தைகளை கவனித்து வர அவன் பெற்றோர்களோ,இல்லை அக்கா தங்கைகளோ இருந்தால்
அவன் மறுமணம் செய்து கொள்ள விரும்ப மாட்டான்.
ஆனால் இப்போதைய இளம் சமுதாயத்தை பற்றி பேசுவோம்.படித்து முடிந்தமோ, இல்லை படித்து
கொண்டு இருக்கும் போதோ இல்லை ஒரு வேலை கிடைத்ததுமோ "" கண்டதும் காதல்,கொண்டதே
கோலம்"" என்று அவர்கள் இஷ்டப்படி வாழ்க்கையை அமைத்து கொள்கிறார்கள். அப்படி அவர்கள்
ஆசைப் பட்டு அமைத்த வாழ்க்கையை அவர்களே " எங்களுக்கு மன ஒற்றுமை இல்லை" என்கிற ஒரு
காரணத்தை சொல்லி விவாக ரத்து பண்ணிக் கொண்டு, மறுபடியும் காதல் செய்து இன்னொருவரை
தங்கள் வாழ்க்கையிலே ஏற்படுத்தி கொள்கிறார்கள்.எத்தனை குடும்பங்களில் இந்த விவாக ரத்து
நிறைய நடந்து வருவதை நாம் தினமும் பார்க்கிறோம். இதை நினைத்து, நினைத்து வேதனை பட்டுக்
கொண்டும் வருத்தப் பட்டுக் கொண்டும் வாழ்ந்து வரும் பெரியோர்களையும் நாம் பார்க்கிறோம்.
ஒரு ஆணை ஒரு பெண்ணோ, இல்லை ஒரு பெண்ணை ஒரு ஆணோ சட்டையை மாறுவது போல
மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருவது மனதுக்கு வேதனை தருகிறதே!!!.
அந்த காலத்தில் பள்ளி கூடத்தில் எல்லா வகுப்புக்கும் MORAL SCIENCE என்கிற ஒரு வகுப்பு
இருக்கும்.அதில் அந்த வகுப்பு வாத்தியார் பல நீதி கதைகளை சொல்லி அந்த இளம் உள்ளங்களில்
பதிய வைப்பார்.இறைத கால கட்டத்திலே அந்த வகுப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.( நான்
தவறாக கூட இருக்கலாம்.மன்னிக்கவும்)
ஆண்டவன் படைப்பில் அன்று படைத்த ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும். இன்று படைத்து
இருக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த வித்தியாசத்தையும் இல்லை.இந்த ""ஆண் பெண் ஈர்ப்பு""
அன்றைய மனித சமுதாயத்துக்கு இருந்து வந்து இருக்கிறது.அதனால் தானே நாம் பிறந்து
இருக்கிறோம்.ஆனால் அதே ""ஈர்ப்பு"" இப்போது அளவுக்கு மீறி வளர்த்து இருப்பதாக நான்
நினைக்கிறேன்.என் கணிப்பு தவறாக கூட இருக்கலாம் .இருந்தால் என்னை தயவு செய்து
மன்னிக்கவும்
எதுவும் " அளவுக்கு அதிகமாக போனால் அமுதமும் நஞ்சு" என்கிற பழமொழிக்கு ஏற்ப இன்றைய
இளசுகள் நடந்து கொள்ளலாமே
இல்லையா சொல்லுங்க??

எழுதியவர் : ஜெ சங்கரன் (9-Oct-17, 9:30 am)
சேர்த்தது : Sankaran
பார்வை : 256

மேலே