சிநேகிதனே -அத்தியாயம் - 03

.....சிநேகிதனே.....

அத்தியாயம் : 03

"என்ன என்னையே பார்த்திட்டிருக்க...??.."

அவனது கேள்வி எனை உலுக்க வேறு புறமாய் பார்வையைத் திருப்பிய நான்...

"நீ ரொம்ப புதுசா தெரியுற சரண்...எனக்கு பெஸ்ட்டு ப்ரண்டா இருந்தா சரண் நீ கிடையாது..."

"ஹா...இதை நீயா சொல்லுற மித்ரா...உன்னை விடவா நான் புதுசா மாறிட்டேன்...?"

"நான் என்னைக்குமே மாறினதில்லை சரண்...அப்பயும் சரி இப்பயும் சரி நான் நானாத்தான் இருக்கேன்...ஆனால் நீ என்னோட பழைய சரண் இல்லை..."

இதை அவனிடத்தில் சொல்லும் போதே என் மனதின் ஓரமாய் சொல்ல முடியாத வலியொன்று உருவாவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது...இதில் சரண் வேறு எனை காயப்படுத்தும் நோக்கோடு மட்டுமே தொடர்ந்தும் பேசிக் கொண்டிருந்தான்...

"எது...உன்னோட சரணா...அதெல்லாம் எப்ப நீ என்னோட காதலை வேண்டாம்னு தூக்கிப் போட்டிட்டு போனியோ அப்பவே எல்லாம் மாறிப் போச்சு...அன்னைக்கே நான் உன் மேல வைச்சிருந்த காதலும் செத்துப் போச்சு..."

"என்னோட பதில் கூட உனக்கு முக்கியமாப் படல இல்லை...என்னைப் பத்திக் கவலையே படாம அங்கிருந்து கிளம்பிப் போயிட்ட...எனக்கு என்ன ஆனா உனக்கு என்னென்னு...என்னை விட்டிட்டு போயிட்ட...அப்படித்தானே...??..."

"சரண் பிளீஸ்...இதுக்கு மேல எதுவும் பேசாத...அது எதையும் தாங்கிக்கிற சக்தி எனக்கில்லை..."

ஆனால் அவன்தான் இப்போது பழைய சரணாக இல்லையே...அதனால் என் கண்ணீர் கூட அவனைக் கரைக்கவில்லை...அவன் மேலும் என்னைக் குத்திக்கிளறும் நோக்கோடே பேசிக் கொண்டிருந்தான்...

"இந்த நாலு வருசத்துல நல்லா நடிக்க கத்துகிட்டே மித்ரா...ஓஓஓ...சொரி...சொரி...நீ நாலு வருசத்துக்கு முன்னாடியே நல்லாத்தானே நடிச்ச...ஆனால் அப்ப எனக்குத்தான் தெரியாம போச்சு அதெல்லாம் நாடகம்னு...எது உண்மை எது பொய்ன்னு கூட தெரிஞ்சுக்க முடியாத அளவுக்கு முட்டாளா இருந்திருக்கேன்..."

"ஓஓ...அப்போ நான் உன்கிட்ட நடிச்சேன்னு சொல்லுறியா சரண்...?என்னோட பாசம்...உன்மேல நான் வைச்சிருந்த நட்பு எல்லாமே உனக்கு பொய்யா போச்சில்ல இப்போ...?.."

"யெஸ்....எல்லாமே பொய்....எல்லாமே பொய்..."என்று அவன் சொல்லும் போதே அவனதும் குரலும் உடைந்து போயிருந்தது....

"எதுக்குடா...இப்படி என்னையும் வார்த்தைகளால கொன்றுகிட்டு....உள்ளுக்குள்ள உன்னை நீயே காயப்படுத்திக்கிற...?.."

"நீ ஏற்படுத்திட்டுப் போன வலி இன்னும் என் மனசில ரணமா இருக்குடி....அந்த கோபத்தையும் வலியையும் நான் வேற யார் மேல காட்டுவேன் மித்ரா...??..."

அவனது கோபமும் வலியும் எனக்குப் புரியாமலில்லை...ஆனால் இதற்கெல்லாம் சேர்த்து அவன் என்னைக் கொன்று புதைத்தால் கூட பரவாயில்லை...ஆனால் அவனால் நான் வெறுக்கப்படுகிறேன் என்பதைதான் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை...

அந்த எண்ணமே என்னைக் கொல்லாமல் கொன்று புதைத்துக் கொண்டிருந்தது...


தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (9-Oct-17, 7:30 am)
பார்வை : 378
மேலே