உன் காதல் போல்

ஏதேதோ கனவுகள்
எல்லாமே உறவுகள்
மறந்திட தானே நினைவுகள்
மனதிற்கு எதற்கு கதவுகள்

கனவுகள் கண்டு
கனவை நினைக்காமல்
கண்டது வண்ணமா
கருப்பா வெள்ளையா

என யோசித்தே
தொலைத்த இரவுகள்
மீண்டும் கனவுகள்
இல்லை இடைவெளிகள்

இது மீள்பதிவல்ல
உன் வாழ்க்கை
உன் உறக்கம்
பதில் மட்டும்
மௌனமாய் இருக்கட்டும்

என்ன சொல்லிருப்பாய்
என தொடரும் கனவுகள்
உன் காதல் போல் ....

எழுதியவர் : ருத்ரன் (9-Oct-17, 8:01 pm)
Tanglish : un kaadhal pol
பார்வை : 196

மேலே