பசுமை

*பசுமை*

விழிக்கிறேன்
பேருந்தின் சாளரத்தில்
வெளி எங்கும் விரிகிறது
சாம்பல் தூவிய வான்
துளியாக சிலிர்க்கிறது
வெம்மையை வாட்டுது குளிரின்று

பசுமை....
பசுமை....
பசுமையில்தான் எத்தனை வகை
ஒருபுறம் கரியது....
மஞ்சல் பூசியது....
நீலம் பாய்ந்தது....
செம்மை கலந்தது....
எளிதில் காணக்கிடைக்காத பசுமை
ஒளிரும் பசுமை

தொலைவிலே வேம்பொன்று
வான் நோக்கி விரிகிறது
வீழும் துளி யாவும்
தன்னை
தழுவியொழுக அணைக்கிறது
கார்பொழிய பசுவொன்று
தலைதாழ்ந்து ரசிக்கிறது
சிறுவால்தனில் தாளமிட்டு
நீராடுது ஆடொன்று
வழிதேடியே துளிக்கூட்டம்
வளைந்து நெளிந்து ஓடுது

சிறுகாற்று அலையில்
சிலிர்த்துச் சிலிர்த்துப் போகிறேன்
இலைதழையுடன்
நானும்
அன்பு பெருகும் உள்ளம்
இளந்தளிரின் மழையாடலில்
அருகிருந்து அணைத்து ரசிக்க
அவள் மட்டுமே இல்லை....

- கிரி பாரதி

எழுதியவர் : கிரி பாரதி (11-Oct-17, 9:01 pm)
Tanglish : pasumai
பார்வை : 178

மேலே