நீதி போதனை பலன் அளித்ததா இல்லையா

இந்த சம்பவம் நடந்தது ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்னால்.இருக்கு என்று
நினைக்கிறேன்.
அது ஒன்பதாவது வகுப்பு.பெண்களும் ஆண்களும் கலந்து படிக்கும் வகுப்பு..
ஆண் பையன்கள் உடையிலும், பெண்கள் உடையிலும் கொஞ்சம் வித்தியாசம்.
பெண்கள் உடலில் சற்று வித்தியாசம்.பெண்கள் குரல் கொஞ்சம் இனிமையாகவும் , ஆண்
பையன்கள் குரல் கொஞ்சம் கட்டையாக ஆகி வந்த பருவம் அது.அரும்பு மீசையுடன் அந்த
வகுப்பில் படித்து வந்தார்கள். கொஞ்சம் "வளர்ந்து" இருந்த பெண்களை பார்த்தால் ஒரு கிளுப்பு
தரும் வயது அந்த வயது.
ஐமபத்திரண்டு வயது ஆன நீதி போதனை (MORAL SCIENCE) வகுப்பு நடத்தும் சாம்ப சிவ அய்யர்
வகுப்புக்குல் நுழைத்தார்.
பல நீதி கதைகள் கொண்ட ஒரு புத்தகத்தை பிரித்து வைத்து அன்று ஒரு நீதி கதையை சொல்ல
ஆரம்பித்தார்.
நாலைஞ்சு "வளர்ந்த" பையன்கள் பக்கத்து பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு இருந்த வளர்ந்த
பெண்களை கலாட்டா பண்ணிக் கொண்டு இருந்ததை அவர் கவனித்தார்.
தன் கண்ணாடியை கழட்டி மேஜை மேலே வைத்து விட்டு தன் புத்தகத்தை மூடி வைத்து விட்டு
அவர் பெண்களை கலாட்டா பண்ணிக் கொண்டு இருக்கும் பையன்களை பார்த்து " நான் சொல்றதை
கொஞ்சம் கவனமாக கேளுங்க இந்த வயதில் ஆண் பையன்களுக்கு வளர்த்து இருக்கும் பெண்களை
பார்த்தால் கிண்டல் பண்ண தோணும். ஆனா ஆண் பசங்க பெண் பசங்களே பாத்தா அப்படி
பண்ணைக் கூடாது.அவர்களை ஓரு " சிஸ்டர்' போல நினைச்சு இருந்து வரணும்.அப்போ தான் உங்க
மனசிலே எந்த கேட்ட எண்ணமும் வராது. புரிஞ்சுதா" என்று சொல்லி விட்டு மறுபடியும் தன் மூக்கு
கண்ணாடியை போட்டு கிட்டு புத்தகத்தைப் பிரித்து அந்த நீதி கதையை சொல்ல ஆரம்பித்தார்.
முன் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு இருந்த மணி எழுத்து நின்றுக் கொண்டு " ஐயா என் சித்தப்பா
ஒரு டாக்டர். அவர் தன் நர்சிங் ஹோமில் அவருடன் வேலை செஞ்சு வந்த ஒரு "சிஸ்டரை" தான்
காதலிச்சு கல்யாணம் கட்டி கிட்டு இருக்கார். அது சரியா ஐயா அப்படி செய்யலாமா" என்று
கேட்டவுடன் வகுப்பில் இருந்த எல்லா மாணவ மணவியர்களும் உரக்க சிரிக்க ஆரம்பித்தார்கள்.
அந்த நீதி போதனை வாத்தியார் அப்புறம் ஒன்னும் சொல்லாமல் பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.
நீதி போதனை மாணவர்களுக்கும் மாணவியர்களுக்கும் பலன் கொடுக்க அவர் இந்த
உதாரணத்தை சொன்னார்.
அவர் நீதி போதனை பலன் அளித்ததா இல்லையா.????

எழுதியவர் : ஜெ.சங்கரன் (12-Oct-17, 12:02 pm)
சேர்த்தது : Sankaran
பார்வை : 979

மேலே