எனது ஊரின் கதையாய் கவிதை சொன்னேன்..
எனது ஊர் அருமையடா.. அதில் தேன் பாயும் அருவியடா..
வான் உயர்ந்த மலை தெரிய.. விலை உயர்ந்த நிலம் தெரியும்..
தென்னை அது உயந்து நிற்க.. மரமெல்லாம் காய்த்து நிற்கும்..
வாழை அது வளைந்து நிற்க.. செடியெல்லாம் பூத்து நிற்கும்..
எனது ஊர் நடுவினிலே.. நெடுஞ்சாலை ஓடுதடா..
எனதூரை வந்துசேர.. யாருக்கேதும் சிரமமில்லை..
எனதூரின் அருமைகண்டு.. குடி வந்து வாழுமடா..
யார் வந்து சேர்ந்தாலும்.. வரவேற்கும் எனதூரும்..
குடிவந்த பின்னாலே.. அவர் ஊரும் இதுதானே..
எனதூரு பிள்ளையெல்லாம்.. திறமையுள்ள திரவியங்கள்..
பல பிள்ளை எனதூரில்.. பல திறமை காட்டயிலே..
ஊர் கெட்டு போகுதென்று.. பலர் சொல்ல கேட்டேனே...
தீப்போலே என் உள்ளம்.. எரிந்து தான் போகுதடா..
சின்னச்சின்ன பையனெல்லாம்.. சிகரட்டோட அலையிரப்போ..
போதை கூட என் ஊரில்.. குடி வந்து சேர்ந்திடுச்சாம்..
காதல் என்று சொல்லிக்கிட்டு கெட்டுத்தான் போரப்போ..
திருடனுங்க சேர்ந்துக்கிட்டு.. ஊரை அரிக்க பார்கிறாங்க..
வருங்கால சந்ததிய.. காப்பற்றி கரைசேர்க்க..
என்னதான் செய்வதென்று.. புரியாத போதினிலும்..
நண்பர்களே நண்பிகளே..பெற்றோரே பெரியோரே..
எதிர்காலம் எனதூரில்.. என்னதான் ஆகிடுமோ..?