அந்த ஒரு நொடி
வழக்கம்போல பேருந்து நிலையத்தில்
காத்திருக்கிறேன் காலை பொழுதில்
என்றும் போல இன்றும் ...
உன் விழியும் என் விழியும்
சந்திக்கும் அந்த ஒரு நொடிக்காக
மணி ஒன்பது ஆகியும்
நீ இன்னும் வரவில்லை
அப்போது ஒலித்த
கோவில் மணியின்
சத்தத்தைவிட அதிகமாக
பெருஞ்ச சத்தத்தோடு
கேட்கத் தொடங்கியது
என் இதயதுடிப்பு எனக்கு ...
தாங்கமுடியாமல் தான்
தவித்துப்போகிறேன் நான் ...
காத்திருப்பை
காதலோடு கடந்த நின்ற என் இதயம்
ஏமாற்றத்தை
காற்றோடு கரைக்க முயற்சித்து தோற்றது
நிச்சயமாக
எதனோடும் கலக்காது என் பார்வையின் நொடிகள்
உன் விழியை தவிர..
வந்து விடு கண்ணே
விம்மி துடிக்கும் என் இதயம்
வெளியே வந்து விழுந்துவிடப் போகிறது !
அதற்குள் வந்துவிடு கண்ணே ...