வெட்கவேலி
வெட்கவேலி
.....................................................................................
அழகின் வெள்ளாமையை
மேய்ந்து விடாமலிருக்க...............
பெண்மை வெட்கவேலி நெய்கிறதா?
என் பார்வைச்சூரியன்
தொட்டுத்தூக்கி விடாதா என்று
தலைகவிழ்கிறதா
உன் முகக்கமலம்?
மலர் பூப்பெய்தியதை
வண்டின் காதுகளில் பறை அறிவிக்கும்
காற்று மாதிரி....
உன் இதயத்தின் காதல் மடல்வெடித்ததை
தம்பட்டம் அடிக்கிறது
உன் நாணம்.......
ஆனந்த் நாகராசன்
மேலவாசல்