எனக்குள் என்றும் நீ
உன் முதல் பார்வையில்
என் நெஞ்சில் தீக்குச்சியை உரசினாய்
அன்று முதல் என் இரவுகளில்
நீளும் கனவுகளில் கலையாமல் ஓடும்
நினைவுத் தேரோட்டமானாய்
என் நாடி நரம்புகளில் ஓடும் உதிர நீரோட்டமே!
பிணக்குகளில் உன்னோடு பிணங்கும் என் சீற்றம்
ஆனால் பிணங்காமல் என்னிதயத்தில்
இருப்பது எப்போதும் மாறாமல் உன் தோற்றம்
ஆக்கம்
அஷ்ரப் அலி