ஏக்கம்

வறண்டு போன நிலம்
நீருக்கு ஏங்கும்...
புதியதாய் வளர்ந்த செடி
பூ பூக்க ஏங்கும்...
இருள் அடைந்த வானம்
வெளிச்சத்திற்கு ஏங்கும்...
பெற்றோரை இழந்த குழந்தை
பாசத்திற்கு ஏங்கும்...
இவை போல நான்
உன் அன்பிற்கு ஏங்குகிறேன்...
உன் உரையாடலுக்கு
ஏங்குகிறேன்...
என் ஏக்கத்தை நீ எப்பொழுது
புரிந்துகொள்வாய்...!!!!!!

எழுதியவர் : அனிதா அய்யப்பன் (16-Oct-17, 3:49 pm)
Tanglish : aekkam
பார்வை : 221

மேலே