நீதியில்லா வாழ்வியல்-

பிறர் கென வாழும்
எண்ணம் மறக்கிறேன்
நான் நானென
அதிகம் யோசித்துவிடுகிறேன்

கீழுருந்து எட்டி பார்ப்பவன்
கை தொட்டு தழுவுகிறேன்
மேலிருப்பவனை இழுக்கச்சொல்கிறேன்
என்னோடிருப்பவனை
எட்டிமிதிக்கிறேன்

சுயநலத்தை சுருக்கு பைகுளிட்டு
இடுப்பில் கட்டிக்கொள்கிறேன்
தூக்கி எறிய சொல்பவனோ
தன்னல இருப்புக்குள்
வசிக்கிறான்

புறணி பேசாதிருக்க
தன்னை பற்றி
இருப்பதை சொன்னால்
பெருமை பேசுபவளாக
சித்தரிக்கப்படுகிறேன்...

நல்லதை செய்தாலும்
பொல்லா தென சொல்வான்
அயோக்கியரை மட்டும்
யோக்கிய ரென சொல்வான்!

பொதுநலம் பேசுகிறவ னெல்லாம்
புதை குழியில் கிடக்கிறான்
மனநலம் அற்றவனாக..

நடந்ததை சொன்னால்
தலைகனம் என்கிறான்
எப்படிருந்தாலும்
இப்படியா இருப்ப தென
இகழ்ந்துவிடுகிறான்!

தலைகுணிந்து வாழ்ந்தால்
தப்பித்துக்கொள்ளும் தன்மை
நல்லபெயருக்கு மட்டும்....!

-செ.சிபியா

எழுதியவர் : சிபியா (16-Oct-17, 7:25 pm)
பார்வை : 81

மேலே