கவிஞர் இரா இரவி கவிஞர் இரா இரவி
கவிஞர் இரா .இரவி ! கவிஞர் இரா .இரவி !
அறிந்தனர் குச்சியால்
மேடு பள்ளம்
பார்வையற்றோர் !
இனிக்கவில்லை ஏழைக்கு
தீபாவளி
நினைவில் கந்துவட்டி !
வங்கியின் குறைந்தபட்ச
இருப்பை எடுத்து
ஏழையின் தீபாவளி !
வைத்துக் கொள்ள ஆசை
வைக்க இடமில்லை
படித்த நூல்கள் !
வேண்டாம் நமக்கு
மழையை விரட்டும்
மழலைப்பாட்டு !
வயிற்றில் நெருப்பு
சிவகாசிக்காரர்களுக்கு
சீனப்பட்டாசு !
மந்தமானது
பட்டாசு வியாபாரம்
புதிய வரிகள் !
.
கீழே விழுந்தும்
கவலையின்றி நடந்தது
நதியாக அருவி !
புறாக்களின் இரை
பசியாறியது
மாடு !
மனமில்லை அழிக்க
இறந்திட்ட நண்பரின்
அலைபேசி எண் !
திரையரங்குக் கட்டணம்
உயர உயர
பெருகும் குறுந்தகடு !
துருப்பிடித்தது
அறுவடை
அரிவாள் !
நடக்கின்றது
வேண்டா வெறுப்பாக
விவசாயம் !
பேரம் பேசுவதில்லை
பெரிய கடைகளில்
சாலையோரம் பேரம் !
நீண்ட நேரமாகும்
பெரிய உணவகங்களில்
உணவு வர !
பார்த்துவிட்டு அகன்றனர்
காசு போடாமல்
கயிற்றில் நடப்பதை !
ஆணை வரவென்பதும்
பெண்ணை செலவென்பதும்
அபத்தம் !
--
.