பொற்கிழி

புகழுக்காக வாழும்
மனிதர்கள் நிறைந்த
உலகம் என்று மாறும்?
வலைத்தளப் புகழுக்காக
பரிசில் கொடா நெஞ்சங்கள்
பேசுவது நீதியோ!
எண்ணும் எழுத்தும்
ஏற்றமிகு வாழ்வும்
தமிழுக்கே உரித்ததன்றோ!
கொடுத்த வாக்கும் தூய சொல்லும்
காவியப் புகழ் எழுத்துக்கு
காற்றில் எழுதிய எழுத்தோ!

எழுதியவர் : லட்சுமி (19-Oct-17, 6:35 am)
பார்வை : 141

சிறந்த கவிதைகள்

மேலே