உனது உயிர் எவ்வளவு
(ஏழு சீர் விருத்தம்)
ஆவின் வால்ம யிர்ஒன் றைநூ றாய்ப்ப குத்ததில்
ஆவின் அக்கூ றில்பத் தின்நூ றாய்கூ றிட்டுப் பின்னதில்
ஆவின் அக்கூ றில்நூ றாயி ரம்கூ றிட்டுப் பார்க்கவும்
ஆவ தெல்லாம் அம்மட் டுத்தான் கண்கா ணாத நம்முயிர்
உலகில் எந்த நாட்டிலும் எந்த ஞானியும் எந்த விஞ்சானியும் ஜீவராசிகளுக்கு, மனிதன் உட்பட கடவுள் தன் பரமாத்மாவிலிருந்து அளித்த ஜீவாத்மா எவ்வளவு என்பதை கூறவில்லை. ஆனால் சித்தர்கள் அதன் அளவினைக் கண்டு சொல்லியுள்ளார்கள்.
அதாவது ஒரு பசுவின் வால் மயிரை குறுக்கு வெட்டில் பத்து லட்சம் கோடிகளாக கூறாக்கிட அதில் ஒரு பங்கே மனிதனின் உயிர் அளவாம். அது மனிதனின் உள் நாக்கு அருகில் ஆலமரவிழுது போல மூளைக்குக் கீழே இருக்கும் நரம்பு முடிச்சுகள் அருகில் உள்ளதாக திருமூலர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறியுள்ளார்.
--- ராஜ பழம் நீ (18-oct-2017)