அவன் இருவிழி

என் இமையை கைது செய்கிறேன்
இவன் இமையை கொஞ்சம் பார்க்க

சிறப்பாய் சிற்பமாய் செதுக்கிய விழிகளால்
இயல்பாய் இதமாய் என்னை இறுக்கிப்பிடிக்கிறான்

சுருக்கென்று இதயத்தில் வலி
நறுக்கென்று இவன் பார்த்ததால்

பார்த்தால் பரவசம் இவன் பார்க்கும்போது
நான் இவன்வசம்

இமை தட்டும் ஓசையும் இசையாகுது
இவன் கண்ணை இமைக்கும் பொழுதில்

என் பெண்மையை கொஞ்சம் மறந்துதான் போகிறேன்
இவன் இருவிழி பார்த்திடும் நொடிமட்டும்

எழுதியவர் : வான்மதி கோபால் (20-Oct-17, 1:42 pm)
Tanglish : avan eruvili
பார்வை : 134

மேலே