உன்னோடு பயணம்
இதழ் கொண்டு பேசாமல் இமை மீறி நான் பேச
நினைக்கிற நொடிகளில் நிலை இல்லாது கண் போகுதே
கடல் தாண்டி போனாலும் மறக்காமல் தொடர்வேன்
நிழல் என்று நினைக்காதே இருளோடும் பிரிவில்லையே
கனவாக நீ என்றால்
இமை திறக்க மாட்டேனே
தொடும் தூரம் நீ என்றால்
இரு விழி மட்டும் போதாதே
உன்னோடு என் பயணம் என்றால்
ஒருபோதும் முடிவில்லையே