கண்ட நாள் முதலாய்-பகுதி-27

....கண்ட நாள் முதலாய்....

பகுதி : 27

"என்னாச்சு அரவிந்தன்..ஏதும் பிரச்சினையா...??.."

"ஆஆ..அப்படியெல்லாம் ஒன்னுமில்லை துளசி...உன்கிட்ட அம்மா ஏதும் சொன்னாங்களா...??.."

"ஒரு வருசக் கணக்கின்னு ஏதோ சொன்னாங்க...அதையும் உங்ககிட்டயே தெளிவா கேட்டுத் தெரிஞ்சுக்க சொன்னாங்க.."

"ம்ம்...நம்மள ஒரு வருசத்துக்கு மட்டும் தனியா வீடு எடுத்து அனுப்பப் போறாங்க..அதுக்கப்புறமா இங்கதான்..."

"ஆனால்...ஏன்...??நாம எல்லாரும் ஒன்னா இங்கேயே இருக்கலாமே...?.."

அவள் தனித்துப் பேசாமல் "நாம்" என்று சொன்னது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது..

"நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறதுக்கு கொஞ்ச டைம் வேணும்னு யோசிக்கிறாங்க...அதுக்கு நாங்க தனியா இருந்தா நல்லம்னு அவங்க பீல் பண்றாங்க..."

"எனக்கும் முதல் அப்பா சொன்னப்போ கஷ்டமாத்தான் இருந்த...ஆனால் அவர் சொன்னதை வைச்சுப் பார்த்தா..,நாம கொஞ்ச காலத்திற்கு தனியா இருக்கிறது பெட்டர்னே தோனுது..."

அவளுக்கும் அவன் சொல்வது போல் இருவருக்குமான ஒருவருடத் தனிமே நல்லதென்றே பட்டது...முக்கியமாய் அவளுக்கு...

"ம்ம்....அவங்க சொல்றதும் சரிதான்...ஒரு வருசத்துக்குத்தானே...கண் மூடித் திறக்கிறதுக்குள்ள ஓடி மறைஞ்சிடும்...வீடு பார்த்தாச்சா...??..."

"ம்ம்...அதைப் பார்க்கத்தான் இப்போ கிளம்பிட்டிருக்கேன்...நீயும் வாவன்..."

"இல்லை நீங்க பார்த்தாலே ஓகேதான்...பிடிக்கலைன்னா கூட அதை நமக்கு பிடிச்ச மாதிரி மாத்திக்கலாம்..."

இதை அவள் சொன்னதும் அவனுள் லேசான குறும்பு எட்டிப்பார்க்க..

"வீடு விசயத்துல மட்டும்தானா...இல்லை எல்லாத்திலையுமா...??என்று புருவத்தை மேலே உயர்த்தியவாறே கேட்டான்அரவிந்தன்...

"ஆஆ...எல்லாத்திலையும்தான்..."என்று ஓர்வித அழுத்தத்தோடு சொன்னவள்,அவனின் குறும்பை நினைத்து லேசாக புன்னகைத்துக் கொண்டாள்...

"அப்போ ஓகே..."என்றவனின் உதட்டிலும் புன்முறுவல் பூத்தது..

"ம்ம்...சரி ரெடியாகிட்டு கீழே வாங்க...நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..."

"இல்லை இப்போ வேண்டாம்...நான் வந்து சாப்பிட்டுக்கிறேன்..."

"ம்ம்....சரி...நான் கீழே போறேன்...காலை சாப்பாட்டைத்தான் செய்ய முடியல...மதிய சாப்பாட்டையாவது செஞ்சு அசத்திடலாம்..."

"சமையல் செஞ்சு அசத்துறதெல்லாம் இருக்கட்டும் மேடம்...அதை முதல்ல வாயில வைக்க முடியுமான்னு சொல்லுங்க..."

"அதை டெஸ்ட் பண்ணிப் பார்க்கத்தான் நீங்க சிக்கியிருக்கீங்களே...??.."

"அடிப்பாவி..."

"ஹா...ஹா...கவலைப்படாதீங்க சேர்..யாமிருக்க பயமேன்..."

"நீ இருப்ப மா...நான் இருப்பேனான்னுதான் தெரியலயே.."என்று அவன் பாவமாய் முகத்தை வைத்துக் சொல்லவும்,அதைக் கேட்டு கல கலவென்று சிரித்தவள்..,

"ரொம்பத்தான்..."

"அப்படின்னா ஒரு வருசத்துக்கு என்பாடு திண்டாட்டம்தான்னு சொல்லு...",

"அடேய் அரவிந்தா ஒருவருசத்துக்கு உன் கையேதான்டா உனக்குதவி.."என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்...

அதைக் கேட்டு இன்னும் நன்றாகச் சிரித்தவள்,

"தெரிஞ்சா சரி.."என்றவாறே ஒற்றை விரலை மடக்கி எச்சரித்தவள்,சிரித்துக் கொண்டே கீழே சென்றுவிட்டாள்...

அரவிந்தனுக்கு அவளுக்கும் அவனுக்குமிடையேயான உரையாடல் மிகவும் பிடித்திருந்தது...அது மனதிற்களித்த இதத்தோடே தயாராகி வெளியே வந்தவன் அர்ஜீனின் அறை திறந்திருப்பதைக் கண்டதும் அவனது அறை நோக்கிச் சென்றான்...

அறையினுள் அர்ஜீன் பைகளில் தனது உடைகளை அடுக்கி எங்கோ செல்வதற்காய் தயாராகிக் கொண்டிருந்தான்...அதைக் கண்டு குழப்பத்தோடே அவனருகில் சென்ற அரவிந்தன்,

"டேய் எங்கடா கிளம்பிட்டிருக்க...??.."

"ஹாய் டா புது மாப்பிளை..."என்றவாறே அவனை அணைத்துக் கொண்டான் அர்ஜீன்...

"அமெரிக்காவில நான் செஞ்ச பிரசென்டேசன் சக்ஸஸ்டா...அந்த ப்ரொஜெக்ட்டுக்காக இங்கையிருந்து என்னைத் தேர்ந்தெடுத்திருக்காங்க...நான் இன்னும் இரண்டு நாளில அங்க இருந்தாகனும்..."

"என்னடா சொல்லுற...நீ செலக்ட் ஆனதில சந்தோசம்தான்...ஆனால் இப்போதான் வந்த...அதுக்குள்ள திடுதிடுப்பின்னு கிளம்புறேன் என்டுறியே...??.."

"என்னடா பண்றது....?என் வேலை அப்படி...இப்போ டிரெயினைப் பிடிச்சாத்தான் நாளைக்கு பிளைட் எடுத்து கிளம்ப சரியா இருக்கும்..."

"சரி சித்தப்பா சித்திக்கு தெரியுமா..?.."

"அவங்களுக்குத் தெரியாமலா...காலையில நாலு மணிக்கே வந்திட்டேன்....வந்ததுமே இதைப்பத்தி எல்லார்கிட்டையும் சொல்லிட்டேன்..."

"முதல்ல எல்லாரும் கோபப்பட்டாங்க...அப்புறம் புரிஞ்சுக்கிட்டாங்க...அர்ச்சனா என்ன ஒருவழி பண்ணிட்டாள்...நீ வேற சப்போர்ட்டுக்கில்லையா கொஞ்ச நேரம் நான் பட்ட பாடு இருக்கே....இப்ப நினைச்சாலும் கண்ணைக் கட்டுதுடா சாமி..."

"ஏன்டா என்னை எழுப்பியிருக்க வேண்டியதுதானே...??.."

"டேய் உன்னை எப்படிடா அந்த நேரத்தில எழுப்ப முடியும்...அதான் நானே எல்லா அடியையும் தனியாளா வாங்கிக்கிட்டேன்..."என்றவாறே வராத கண்ணீரை துடைத்துக் கொண்டான் அர்ஜீன்...

"ஹா...ஹா...சரி இப்பவே கிளம்புறியா...??.."

"இல்லைடா...மதியம்தான் டிரெயின்..."

"எப்போ வேலை முடியும்..??.."

"அது எப்படியும் ஆறு மாசம் இல்லைன்னா ஒரு வருசம் ஆகும்டா...ஆனால் அதுக்குப்புறமா இங்கதான்...எங்கையும் போறதா இல்லை..."

"இப்படித்தான் போன தடவையும் சொல்லிட்டுப் போன...இப்ப என்னடான்னா...ஆறு மாசம்,ஒரு வருசம் என்டுகிட்டு..."

"எனக்கு மட்டும் உங்களை எல்லாம் பிரிஞ்சிருக்கனும்னு ஆசையாடா...??.."

"சரிடா...சரி அதுக்காக ரொம்பத்தான் முகத்தை பாவம் மாதிரி வைச்சுக்காத..."

"ஹி...ஹி....ஆமா நீ எங்க வீடு பார்க்க கிளம்பிட்டியா...?.."

"ஆமான்டா....உனக்கு எப்படிடா தெரியும்...??காலையிலதான் எனக்கே அப்பா சொன்னாரு...

"என்னோட அப்பாதான்டா....அவனும் ஒரு வருசத்துக்கு தனியா போயிடுவான்..இப்போ நீயும் கிளம்புற என்டு புலம்பித் தள்ளிட்டாரு..."

"அவரோட கவலை அவருக்குத்தான்டா தெரியும்....அன்னைக்கு உன்னை கல்யாண மண்டபத்தில காணோம் என்டவே ரொம்ப பதறிப் போயிட்டாரு..."

அவன் காணாமல் போன அன்றைய நாளின் நினைவில் அர்ஜீனின் மனம் மீண்டும் இறுக்கமாகியது...பழைய நினைவுகள் அவனை விடாது துரத்திக் கொண்டிருப்பதால் தானே அவன் இப்போது ஓடி ஓளிவது...

எந்த வாய்ப்பை அவன் ஆரம்பத்தில் நிராகரித்துவிட்டு வந்தானோ இப்போது அதே வாய்ப்பைத் தேடி ஓடுவது அவளது நினைவுகளிலிருந்து தப்பிச் செல்லவே...அன்றைய நாள் தந்த வலியின் தாக்கத்திலே அன்றே பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்து முடித்திருந்தான்...இந்த இடைவெளி அவன் மனதிற்கு மருந்தாகும் என்ற நம்பிக்கையோடே இப்போது அவன் கிளம்புவதற்கு தயாராக இருக்கின்றான்...

ஆழ்ந்த சிந்தனைக்குள் முழ்கிக் கொண்டிருந்தவனை அரவிந்தனின் குரல் தடுத்து நிறுத்தியது...

"என்னடா..இப்பெல்லாம் நீ நிறைய யோசிக்கிற மாதிரி இருக்கு,ஏதும் பிரச்சினைன்னா சொல்லுடா...??.."

"அப்படியெல்லாம் ஒன்னுமில்லைடா....நீ போயிட்டு வா....அப்புறமா பேசலாம்..."

"சரிடா....நீ துளசியை இன்னும் பார்க்கலை ல....வா உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்..."

"ஆஆஆ....இல்லைடா....அவங்க இப்போ வேலையா இருப்பாங்க...நான் அப்புறமா பார்த்துக்கிறேன்..."

"ரொம்பத்தான் பண்ணாம வாடா..."என்றவாறே அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு படிக்கட்டுகளில் இறங்கினான் அரவிந்தன்...



தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (22-Oct-17, 10:06 am)
பார்வை : 623

மேலே