படம் பிடிக்கும் பிணங்கள்

படம் பிடிக்கும் பிணங்கள்

எரிவது குழந்தையாக இருந்தாலும்
எரிந்து சாம்பலாகும் வரை
கைப்பேசியில் காட்சிப்படுத்து

வலைதளத்தில் பரப்பு
முகநூலில் பதிவேற்று
பார்த்தவர்களின்
இரசித்தவர்களின்
எண்ணிக்கையைப்
எண்ணிப்பார்த்து
பார்த்து பரவசப்படு

உன் உயிர்காக்க
நீ கடைசியாய்
ஒருவாய் தண்ணீருக்காக
ஏங்கும்போது
என் வயிற்றிலெரியும் தீ
உன்னை வந்து சேரட்டும்

எரியும் பிஞ்சை படமாக்கும்
பிணமே

எழுதியவர் : சூரியகாந்தி (24-Oct-17, 12:08 am)
பார்வை : 70

மேலே