மூடநம்பிக்கை

உரிமையாளன்

மண் குலைத்து
கரையான் உருவாக்கிய
புற்றை…
பாம்பு வந்து பிடுங்கிக்கொள்ள
எல்லோரும் பாம்பு புற்றென்றார்கள்.

ஐயன் ஒருவன்
அந்த பாம்பையும் விரட்டிவிட்டு
அம்மன் சிலையை வைத்துப் போனான்
எல்லோரும் சாமி புற்றென்றார்கள்.

கஸ்டப்பட்டு கட்டிய கரையானை மட்டும்
கண்டுகொள்ள ஆளில்லை!.

எழுதியவர் : (24-Oct-17, 12:13 pm)
Tanglish : moodanambikkai
பார்வை : 4883

மேலே