படிக்கும் போதே காதலா
படிக்கும் போதே காதலா?
பழகும் போதே ஆவலா?
அடக்க உணர்வே இல்லையா?
அன்னை பயமே வ'ல்லையா?
மீசை முளைக்கும் வயதிலே
மெள்ள முளைக்கும் காதலில்
ஆசை அறிவை முந்துமே!
அறிவு மழுங்கிப் போகுமே!
பருவம் தந்த கிளர்ச்சியைப்
பழுத்த காதல் என்பதா?
உருவம் தந்த கவர்ச்சியை
உயர்ந்த காதல் என்பதா?
இந்த வயதில் வருவது
இளமை ஈர்ப்புத் தானடா!
உண்மைக் காதல் வருவது
உலகம் புரியும் போதடா!
படிப்பில் கவனம் சிதறினால்
கிடைக்கும் வேலை தவறுமே!
கிடைக்கும் வேலை தவறினால்
நடத்தும் வாழ்க்கை நரகமே!
காதல் வெற்றி பெற்றபின்
வாழ்க்கை தோல்வி அடைவதா?
காதல் மட்டும் வாழ்க்கையா?
வாழ்க்கைக் காகக் காதலா?
பெற்றோர் ஆசி கிடைக்குமா?
பெரியோர் வாழ்த்துக் கிடைக்குமா?
உற்றார் நெஞ்சம் களிக்குமா?
உங்கள் மகிழ்ச்சி நிலைக்குமா?
ஆயி ரம்பேர் படிக்கையில்
உனக்கு மட்டும் காதலா?
போய்உன் வேலை பாரடா!
போட்டி போட்டுப் படியடா!
*************************************************
*************************************************