மறப்பேனா

மறப்பேனா என் மார்பில் -
நீ சாய்ந்தழுத நொடிப்பொழுதை...

காலங்கள் போனபின்னும்
கண்ணீரும் போகவில்லை...

காயங்கள் விதையாகி
வீழ்வேனோ உனைப்பாராமல்...

மதி கலங்கி நான் நிற்க
என்னதான் மந்திரம் செய்தாயடி...

உன்னில் நான் தோற்றுவிட்டேன்
உள் நெஞ்சம் தாங்குதில்லை...

பாவங்கள் நான் செய்ததில்லை
பலி நூறு சொல்கின்றாய்...

பரிதாபம் நீ பாராமல்
என் பயணங்கள் பாதை மாறுதடி..

உனை மறந்து என் உயிரானாய்
பின், உரிமையில்லை என்றே உதறிவிட்டாய்..

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (25-Oct-17, 2:16 pm)
Tanglish : marappenaa
பார்வை : 117

மேலே