ஒரு காதலின் மரணசாசனம்

பணம் செலவழிய செலவழிய காதலும் கரைந்து அன்பும் மலையேறும் ஆடம்பர உலகம் இதுவென்று நண்பன் சொன்ன போது மறுத்தேனடி,
என்னுயிர் காதலி உயிரே போனால் என்னைப் பிரிய மாட்டாளென்று...

கல்லூரி படிப்பில் காதல் பாடம் கலந்து இனிமை தந்தவளுக்காக நாடு துறந்து சென்று ஆடம்பர வாழ்வுக்கு பணம் தேடி திரும்புகையில் எனக்குச் சொந்தமில்லாதவளாகி விட்டாள் அடுத்தவன் மனைவியாக...
காலம் மாற்றியதா?
அடி பெண்ணே!
என் காதலை மறந்ததும் ஏனோ?

தாயின் முகம் காணாமல் கண்ணே,
உன் முகம் நினைவில் கொண்டே அவமானங்களை சகித்து கஷ்டங்களை ருசித்து நான் சம்பாதித்ததெல்லாம் உனக்காக...
நீ அறிவாயோ?

நீயில்லா வாழ்வில் நான் சாதித்ததெல்லாம் ஒன்றுமில்லை...
வெற்றி வந்தாலும் தோற்றதாய் தலைகுனிகிறேன்...
இனிப்பைத் தின்றாலும் கசப்பாய் உணர்கிறேன்...
என்னோடு நீ இருந்த போது இருந்த சந்தோஷம் இப்போது இல்லையடி...

நண்பன் எவ்வளவோ சொன்னானடி...
கேட்டேனா?
உடலைத் தேடும் உலகமென்று நீ உறுதிபடுத்தி விட்டாயடி...

நீ செய்த சத்தியம் பொய்த்ததடி...
நாம் காதலும் செத்தும் சாகாமல் ஒற்றை விரலாய் உயிர் வாழ போராடுதடி...
நீயில்லா வாழ்வு எனக்கு வேண்டாமடி...
மரணத்தை முத்தமிடுகிறேன்...
நீ வாழ்க ஆனந்தமாக...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Oct-17, 8:57 pm)
பார்வை : 4082

மேலே