முத்தம் தர வாராயோ

மாயச்சாவி கொண்டு
எண்ணக்கதவுளை திறந்து
உள்ளே நுழைந்து விடுகிறாய்.
சிறுபூவே துளிதேனே
நீதானே நல்வரம்தானே.

வண்ணங்களை குழைத்து
எண்ணத்தூரிகையால்
ஓவியம் ஒன்றை வரைந்தேன்
அது உன் உருவத்தையே
காட்சிப்படுத்துகிறது.
தோகையே மயில் தோகையே.

நெடுங்காவியம் ஒன்றை படைத்திட
இலக்கியங்கள் பல படித்து
இலக்கணங்கள் கோர்த்து
எழுதிட
குறுங்காவியமாம் உன்பெயர்
வெள்ளைத்தாள்கள் முழுவதும்.
மானே! செம்மீனே!

வெகுதூரத்தில் நீ வீணை
இசைக்கின்றாய் அது எனை
இருப்பு கொள்ளாத
பறக்க இயலாத தீவில் இடுகிறது.
காதல் தீயில் நெஞ்சை சுடுகிறது.
தீயே!இனி நீயே!

இருள் அடைந்து கிடக்கும்
எனது அறையில்
ஒற்றை மெழுகுவர்த்தியை
ஏற்றி வைத்து காத்திருக்கிறேன்
முத்தம் ஒன்றை இட்டு என்னை
இறவா நிலையை எய்தவிடு
சிறுபூவே துளிதேனே
நீதானே நல்வரம்தானே.

எழுதியவர் : Parithi kamaraj (25-Oct-17, 11:01 pm)
பார்வை : 200

மேலே