என்ன சாதித்தோம் நாம்
பத்து ரூபாய் கிடைத்தால் போதுமென்ற கூட்டம் ஒரு பக்கம்...
பத்து கோடி ரூபாய் கிடைத்தாலும் போதாதென்ற கூட்டம் மற்றொரு பக்கம்...
இரண்டுக்கும் மத்தியில் வளர்ந்துவரும் சுயநல பெருச்சாளிகளிடம் சிக்கித் தவிக்கும் தொழிலாளிகளிடம் வீசும் சுயநல துர்மணத்தால் பாதிக்கும் சுவாசமென்ற ஒற்றுமை...
ஒற்றுமையின்மையால் பிளவுப்பட்டு எது உண்மையென்று புரிபடாமல்,
எது இயற்கை குணமென்று பிடிபடாமல்,
வீணடிக்கப்படும் வாழ்க்கையில் மதங்களும், அவற்றின் வேதங்களும் பொயென்று நான் கூறவில்லை...
உங்கள் செயல்களே கூறுகின்றன...
என்பதை அறிவீர்களா??
அறிந்தீர்களென்றால் இறைவனென்பவன் வகுத்த நியதிகளென்று நீங்கள் பரப்பிய அருளுரையும் பொய்த்துவிட்டதென்று ஒப்புக் கொள்வீர்கள்...
ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை யாதென்றால் இயற்கை தனது செயல்களை தானே தீர்மானிக்கிறது...
புயல் காற்று வீச வேண்டுமா? அல்லது
தென்றல் காற்று தாலாட்ட வேண்டுமா?
என்பதை தீர்மானிப்பது இயற்கை, தன் கடமை உணர்ந்து...
மனிதர்களாகிய நாம் மட்டும் நம் கடமையை உணராமலே செயல்களைத் தேர்ந்தெடுத்து ஆத்ம நிம்மதியின்றி எதற்கெடுத்தாலும் அலட்டிக் கொண்டு,
கர்வம் பொங்கிவழிய மாண்டு போகிறோம் சாதனையொன்றும் ஆற்றாமலேயே...