கண்ட நொடியில்

அன்பே
எதிர்பாராத வாழ்வில்
என் எதிரே நீ தோன்றினாய்!

கண்களால் உன்னை கண்ட
நொடியே
கண்மணிகளில் விழுந்தேன்...!

நிமிர்ந்து பார்க்க நேரமின்றி
நிழல் அதில்
நிலை மாறி விழுந்தேன்...!

சிரித்த நேரமே
சிந்திக்க நேரமின்றி
சின்ன சிரிப்பில் விழுந்தேன்...!

அழகிய உன் முகம் அது
அங்கும் இங்கும் ஆட!
அசைய மறந்து
ஆசையில் விழுந்தேன்...!

ஒருபுறம் ஒதுங்கிய
கூந்தலில்
மறுபுறம் பார்க்க மனமின்றி
மயங்கி விழுந்தேன்...!

கட்டிய கைகளைக் கண்டு
கண் விழிக்க முடியாமல்
கறைந்து நின்றேனடி!
உயிரே
உன்னைக் கண்ட நொடியில்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (29-Oct-17, 12:12 pm)
Tanglish : kanda nodiyil
பார்வை : 807

மேலே