சுவர்
அனைத்தையும் கண்டு ,
எதையும் காட்ட,
வெள்ளைரசக் கண்ணாடி,
சுவர்...
ஆயிரம் செவிக்கொண்டு,
இரகசியம் பல கேட்டு,
புறம் பேசா அறைவாசி,
சுவர்...
அரசியல் முதல் அனைத்தையும்,
பேசிய,பேசிக்கொண்டு இருக்கும்,பேசும்,
முதல் சமூக ஊடகம்,
சுவர்...
ஏறக்குறைய எல்லா வீட்டிலும்,
விளையாட்டு வகுப்பறையின் ,
வண்ணக் கரும்பலகை,
சுவர்...
இளைஞர்கள் அரசவையின்,
'குட்டி' சிம்மாசனம்,
சுவர்...
தனிமையை எப்போதும் விடுவிக்கும்,
என் தோழன்,
என் வீட்டு சுவர்...