இது என்னடா அதிசயம்
இரண்டு எட்டு வயது சிறுவர்கள் பேசி கொண்டு இருந்தார்கள்
முதல் சிறுவன்; " டே மணி, எங்க அப்பா சொன்னாரு. கடவுள் விநாயகருக்கு நாலு கை
இருக்காமே உனக்கு தெரியுமா"
உடனே இரண்டாவது சிறுவன்: "டே ராஜ் இது என்னடா அதிசியம். என் தாத்தாவுக்கு கூட நாலு
கை இருக்கு தெரியுமாடா" என்று சொன்னவுடன் " அது எப்படி இருக்கு முடியும். எனக்கு நம்பிக்கை
இல்லேடா" என்று சொன்னவுடன் " சரி நீ என் கூட வா நான் காட்டறேன்" என்று சொல்லி விட்டு
மணியை கூட்டி கிட்டு ராஜ் அவன் வீட்டுக்கு வந்தான்.
வாசலில் போட்டு இருந்த ஈஸி சேரில் ராஜின் தாத்தா உட்கார்ந்து கொண்டு இருந்தார்.
ராஜ் கொஞ்ச தூரத்தில் நின்றுக் கொண்டு "டே ராஜ். நான் சொல்றேன் எண்ணிக்கோ. அவருக்கு
வலது கை இருக்கா அது ஒரு கை. அவருக்கு இடது கை இருக்கா அது ரெண்டாது கை.அவர்
தலையைப் பாரு அது வழுக்கை . இது அவருக்கு மூணாவது கை.அவர் வாயைப் பாரு. அது பொக்கை.
இது அவருடைய நாலாவது கை . இப்ப புரிதா ராஜ்" என்று சொல்லி சிரித்தான் மணி.
மணியின் முகத்தில் அசடு வழிந்தது.