மனிதனின் மதிப்பு கல்வியை வைத்தே

மனிதனின் மதிப்பு கல்வியை வைத்தே...

கல்வி ஒன்றே மனிதன் சொத்து
கல்வி கற்ற மனிதன் சான்றோன்
கல்வி காட்டும் வழிகள் நன்றே
கல்வி தந்தால் வாழ்க்கை சிறக்கும்

கற்ற பின்னே வேலை பெற்றான்
சுற்றம் சூழ வாழக் கற்றான்
நல்ல பழக்கம் கல்வி கொடுக்கும்
உள்ள வரைக்கும் தீமை தடுக்கும்

படித்தால் முடியும் சுயமாய் சிந்திக்க‌
முடியும் எடுக்கும் காரியம் எல்லாம்
துடிக்கும் இதயம் இருக்கும் வரைக்கும்
இருக்கும் கல்வி அரணாய் சுற்றி

ஆய்ந்து ஆராய கல்வி உதவும்
நன்மை தீமை தெரியப் படுத்தும்
நேர்மை வழியும் தானாய் தெரியும்
அப்படி நடக்க வெற்றி கிட்டும்

கல்வியின் பயனோ சொல்லி மாளாது
என்றும் மனிதனை வீழ விடாது
மதிப்பினைக் கூட்டும் கல்வியின் கூட்டு
கல்வியைக் கற்போர் வெல்லுவர் என்றும்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Nov-17, 4:15 pm)
பார்வை : 2947

மேலே