என்றும் மாறாது
இப்போது
என்னை
நேசிப்பது போல்
நம்முடைய
கல்யாணத்திற்கு பிறகும்
இப்படியே
நேசிப்பாயா? என்று
அடிக்கடி கேட்கும்
பேதை பெண்ணே!
சத்தியமாக
கல்லறை வரை
உன்னை
இப்படியே நேசிப்பேன்...
நான் நேசிப்பது
' உன் இளமை'யை அல்ல...
'உன் இதயத்' தைத் தான்...
கவிதை ரசிகன் குமரேசன்