நட்பு

நட்பு

இதயம் எங்கும் கேட்குதடா
இனிய நட்பின் சந்தம் - அது
இன்று நேற்று வந்ததல்ல
இளமை தந்த சொந்தம்
அன்பே எங்கள் வேதம்
அதில் என்றுமில்லை பேதம்
நண்பன்பேரை சொன்னால் போதும்
நரம்பில் இன்பம் மோதும்

ஊரைச் சுத்தி வந்தபோதும்
உதயம்போல சுத்தம் - காலம்
கணினியிலே கழித்த போதும்
கடமை எங்கள் ரத்தம்
கூடி என்றும் வாழ்ந்திடுவோம்
கோபம் கொள்ள மாட்டோம் - ஒரு
கொள்கை ஏதும் இல்லாட்டாலும்
குடும்ப மானம் காப்போம்

தாய்குலத்தின் துயரம் தன்னை
தன் துயராய் நினைப்போம் - சிறு
துயரம் வந்து சேரந்துவிட்டால்
உயிர் கொடுத்து காப்போம்
தப்பு யாரு செய்தபோதும்
தட்டிக்கேட்டுத் தடுப்போம்
கடமையோடு கண்ணியத்தை
கருத்துடனே மதிப்போம்

தந்தை சொல்லை தட்டினாலும்
சிந்தையிலே மதிப்போம் - அவர்
சிந்துகின்ற வியர்வைத் துளியின்
சிரமம் அறிந்து துதிப்போம்
நட்பைப் பொன்ற சொந்தமிந்த
நானிலத்தில் இல்லை நல்ல
நண்பன் மட்டும் அமைந்துவிட்டால்
நன்மை நமது எல்லை.

பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (1-Nov-17, 9:30 pm)
Tanglish : natpu
பார்வை : 218

மேலே