ஓர வஞ்சனை
பாதக் கொலுசு வைத்து பவித்திரமாய் நடந்து வந்தாள்
சலங்கை ஒலி மின்ன பரதத்தின் வடிவம் தந்தாள்
சலங்கை ஜதியை மாத்திரம் என்னிடம் விட்டுவிட்டு
அவ்வாறே அவள் அங்கிருந்து மறைந்து சென்றாள்
கவிதைகள் பல வரைந்தேன் அவள் அழகு கூற
முடியவில்லை என்னிடம் எல்லையை மீறுகின்றாள்
என் சொற்களுக்கு சிக்காமல் பலவாறு வதைக்கின்றாள்
அடுக்கில் நுழைந்து என்னிடம் பகிடிவதை புரிகின்றாள்
இது இறைவன் செய்த சதி
அழகின் அடை மழையை ஓரவஞ்சனையாக
அவள் உடலெங்கும் அவன் ஒய்யாரமாய்ப் பெய்துவிட்டான்
ஆக்கம்
அஷ்ரப் அலி

