உன்னால் உன்னில் வாழ்கிறேன் இறைவா

எங்கும் ஒலிக்கிறது இறைவா! உன் அத்தாட்சி...
நீ செய்வதே உண்மையின் அரசாட்சி...
உன்னைக் காணாத மனதிற்கெல்லாம் பெரும் வீழ்ச்சி...
அறியாமைதான் உலகில் எங்கும் தென்படும் நடைமுறை காட்சி...

கண்களிரண்டும் கண்ணீர் சிந்த துடைக்க முற்படும் கைகளில் தெரிகிறதே இறைவா! உன் அன்பின் சாட்சி...
பெற்றெடுத்த பெற்றோரை வீட்டைவிட்டு விரட்டிவிட்டு,
கோவிலில் வந்து இறைவா! உன்னைத் தெடும் மனங்களுக்கு தருவாயோ காட்சி??

நன்றி கெட்ட பிள்ளைகளும் நன்றாக வாழவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர் மனங்களில் செய்கிறாய் அருளாட்சி...

உன்னை உணர்ந்த நானென்று உன் கட்சி...
உன்னையே நம்பி, உன்னையே முன்நிறுத்திக் கவிபாடும் பட்சி...
சொல்லாட்சியல்லா செயலாட்சியே உன் செங்கோல் குடைக்குள் தருமத்தின் ஞானத்தை அகிலம் பெற செய்யும் இயற்கையின் செயலாட்சி...

கருணையுறு கற்பூரமே...
அன்புறு அகிலமே...
வருவாய் வேகமாய்...
தருவாய் தீமையை எதிர்க்கும் சக்தி...
தாங்குவாய் என் மன பாரம்...

அகிலம் குளிரும் மாரியாய் பொழியும் உன் அன்பில் இடைவிடாது நனைகிறேன் இவ்வுலகின் துயரங்களை மறந்து...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (2-Nov-17, 6:51 pm)
பார்வை : 1003

மேலே