ஞாபகமழை

வானம் அழுதுகொண்டிருக்கிறது!
பூமி நனைந்து கொண்டிருக்கிறது!

வறண்ட பூமிக்கு எத்தனை ஏக்கம்?
ஒவ்வொரு துளியையும் தன்னுள் ஆசையாய் இறக்கிக் கொள்கிறது!!

நிறைந்து நிற்கிற ஏரிக்கு ஒவ்வொரு துளியும் பாரம்தான்!!

வானின் துளிகள்
பூமிக்குள் இறங்கினால் தான்
மண்ணுக்கு சுகம்!!!

சிறுவயதில்
சித்தாடை சிலுசிலுக்க
மழையில்
நனைந்த சுகம்!

இப்போது நினைத்தாலும்
மாறாமல் அந்த சுகம் மனசுக்குள் வந்துநிற்கும்!!

மழையே வா
இன்னொரு முறை
உனக்குள் நான் நனைகின்றேன்!!!

எழுதியவர் : அருள் நாதன் (4-Nov-17, 12:03 am)
சேர்த்தது : Arulnathan
பார்வை : 84

மேலே