கள்வன்
என் கள்வனே!
என்னை ஏன் கேட்கிறாய்?
வார்த்தை இல்லை என்னிடம்
வாழும் காலம் வரை உரைவேன் உன்னிடம்
மணக்கதவு மூடியிருந்தும்- எப்படி
என் உள்ளே நுழைந்தாய்?
கண்கள் மூடிய்ருந்தும்- நீ
கணவிலும் வந்தது ஏனோ?
என் உயிரில் எப்படி கலந்தாய்
எண்ணிலடங்கா மருந்துகள் இருந்தும் எப்படி
என் உயிர்க்கு மருந்தானாய்?
கள்வனை போல் நுழைந்து- என்
சிந்தனையை சிறைபிடித்துவிட்டாய்
என் கள்வனே!
கதிரவன் மறைந்தாலும்- நம்
பாசத்தீ மறையாது
மதியவள் ஒளிந்தாலும்- உன்
மதியவள் என்றும் உன்னுடன்.