எல்லாம் ஒருவனே
ஆதவன் கிழக்கே
தோன்றுவது எதனாலே
சந்திரன் திங்களில்
ஒருநாள்
மறைந்துப்போவது எங்கே...?
இடிக்குள்ளும்
மின்னலுக்குள்ளும்
மழைக்குள்ளும்
சக்தியை புகுத்தியது யார்...?
பூவுக்குள் வாசம்
வைத்தது யார்
ஒவ்வொரு பூவுக்குள்ளும்
நிறங்களை வைத்தது யார்
எத்தனை எத்தனை
ஜீவராசிகள்
அனைத்திற்கும்
உணவளிப்பவது யார்...?
கடுகளவு விதைக்குள்
மலையளவு விருட்சத்தை
வைத்தது யார்
பஞ்சபூதங்களையும்
தர்மத்துக்கு அடங்கி நடக்க
வைப்பது யார்...?
தாயின் ஸ்தனத்தில் பாலை
அடைத்து குழந்தையின்
பசியை போக்கியது யார்
தாயில்லா பிள்ளைகளுக்கு
வாயில்லா பசுவை
தாயாக்கியது யார்...?
உதிரத்தில் உயிர்வைத்து
கருவுக்குள் வளரவைத்து
ஆண் பெண் அலியென
பிறப்புகளை படைத்தும்
காத்தும் அழித்தும்
ஆட்சி செய்பவன் யார்...?
ஒருவன் அல்லா என்பான்
இன்னோருவன் இயேசு என்பான்
மற்றொருவன் ஈசனென்பான்...
மண்ணில் விழும் மழைத்துளி
எல்லாம் கடைசியில்
சமுத்திரத்தை அடைவதைப்போல்
எல்லாமும் ஒரே தெய்வம் தான்
நம் பார்வையில் மட்டும்
வேறுபடுகிறது...
இறை நம்பிக்கை மட்டும் உண்மை
நம்பினார் கெடுவதில்லை...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
