நீ இல்லா இந்த நொடி

பேனை ஊன்றா வெற்று காகிதம் என்னில்
அன்பை ஊற்றி இன்பம் தந்தாய்!
வஞ்சமில்லா என் நெஞ்சை
மிஞ்சிட மகிழ்வளித்தாய்!
உன்னைக் காணும் அடுத்த நொடி
என் சோகம் தீர்ந்ததுவே!
நீ இல்லா இந்த நொடி
எனைச் சாவும் நெருங்கிடுமே!

எழுதியவர் : லெஸ்லிநிஹால் சாயிசுஹானி (5-Nov-17, 9:03 pm)
பார்வை : 851

மேலே