அவள் பார்க்காத இதயம்

அவள் பருவம் தொட்ட பெண்ணென்று பாடிப் பாடி கவிதை எழுதினேன்...
வார்த்தையை தேடித் தேடி...
வாய்க்கால் வழியோடும் நீரைப் போல கூந்தலொன்றை கண்ட அவளிடம்,
கண்களை பறிகொடுத்தேன்...
இதயத்தின் நான்கு அறைகளிலும் அவளுடைய புகைப்படைத்தை ஒட்டிவைத்தேன்...
இதயமோ ஒரு கண்காட்சி ஆனது...
அவளைத் தவிர அனைவருமே பார்த்து சென்றனர்...
அவள் எட்டிக்கூட பார்க்கவில்லை...

எழுதியவர் : மணிபாலன் (5-Nov-17, 11:59 pm)
பார்வை : 75

மேலே