குறுங்கவிதைகள் I

௧, வரம்
ஒரேகுணம் அமைந்த இருவர்
பதியும் பத்னியுமாக
வாழும் வாழ்க்கை அமைவதுதான்
உண்மையான வரம்..
௨, இயற்கை
இந்த
உலகையே ஆண்டுவரும்
நீல-பசுமை நிறத் தலைவி - இயற்கை
௩, வீடு
ஒரு நாட்டின்
செல்வ-பஞ்ச நிலைகளை
எடுத்துச்சொல்லும்
ஒரு
சிறிய இடம்