முதல் காதல்
பட்டாம் பூச்சியின் சிறகசைப்பு
காந்த விழிகளின் அழைப்பு
சொல்லத் துடிக்கும் இதழ்கள்
சொல்லாமல் துடிக்கும் என்னிதயம்
வட்ட நிலா அவள்
என்மனதைத் தொட்ட நிலா
பெயர் அறியாமலே
செம்புலப் பெயல் நீரில்
கையோடு கைசேர்த்து
கற்பனையில் பாடினேன் டூயட்டு
இவள்தான் என்
இணை இவள்தான்
என் மனப்பட்சி கூவிட
சில்லென்ற மழைச்சாரலாய்
சிலிர்ப்புடன் எழுகிறது
முதல் காதல்