எழுத்துக்களில் காணலாம்,இறைவனை
மூன்றெழுத்தில் பிரணவ மந்திரம்
பஞ்சாக்ஷரத்தில் சிவன்
அஷ்டாக்ஷரத்தில் திருமால்
இப்படி அக்ஷரங்களில்
இறைவன் புகுந்திருக்க
அக்ஷரமே இறைவனாய்,
அதனாலோ வள்ளுவனும்
'அகரமுதலி எழுத்தெல்லாம்
ஆதி பகவான் முதற்றே உலகு'என்றானோ
எழுத்தாய் ஓலைச்சுவடிகளில் இருந்தால்
மந்திரத்தால் யாது பயன் ?
அவற்றை கற்றறிந்த வேதியர் முறைப்படி ஓத
எழுத்துக்கள் இறைவனாய் மாறும்
அவெழுத்துக்களாலான மந்திரங்களின்
பலன்கள் தந்திடும் என்பர் ஆன்றோர் !
உயிர்கொண்ட எழுத்துக்களில்
இறைவனை காணலாமா நாமும்
வாரீர் முயன்று பார்க்கலாம்
' முயற்சி திருவினை ஆக்கும்'