சோம்பலின் விளைவு

அழகான வார்த்தைகள்
அறியாமலே மாட்டியது சிந்தையில்..
அதன்
அழகிநூடே பயணித்துக்கொண்டிருக்க,
புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருந்தது
இமைகள் மூடிய விழி
இரண்டரைநிமிட பயணமது..
பின்
இறுதியில் எழுதிட நினைக்க,
என்னை மறக்கடித்து
என் மனதிடம் சொல்லிச்சென்றது,
சோம்பலின் விளைவுகள் என்னவென்று..!